Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

46 மனநல நோயாளிகளுக்கு கொரோனா…. வேதனை தரும் செய்தி…!!!

கன்னியாகுமரியில் மனநல காப்பகத்தில் 46 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம் புதூரில் உள்ள மனநல காப்பகத்தில் 46 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மனநல காப்பக கொரோனா உறுதியானதால் 80 நோயாளிகளுக்கு பொருத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 46 மனநல நோயாளிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் 46 பேரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |