Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த 46 பகுதிகளுக்கு விலக்கு ….!! 

சென்னையில் கொரோனா பாதித்து தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 பகுதிகளுக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்த விவரங்களை ட்விட் மூலம் மாநகராட்சி விளக்கியுள்ளது.

ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது சென்னையில் மட்டுமே அதிகமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொடர்ச்சியாகவே புள்ளி விவரங்கள் காட்டுகின்றது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 46 கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்து ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கின்றது.

Categories

Tech |