பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais), மற்றும் எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) ஆகிய மாகாணங்களில் பயங்கர புயல் காற்றுடன் கனமழை விடாமல் கொட்டி தீர்த்தது.
இதையடுத்து ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அங்குள்ள பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதுவரை இந்த இயற்கை சீற்றத்துக்கு 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25,000 பேர் பாதுகாப்பாக வேறொரு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.