Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவை அதிர வைத்த நிலநடுக்கம்…. 46-ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை…!!!

இந்தோனேசிய நாட்டில் உருவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கமானது, 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மக்கள் அலறி அடித்துக் கொண்டு திறந்தவெளி மற்றும் மைதானங்களை நோக்கி ஓடினார்கள். இதில் சியாஞ்சூர் என்ற நகரம் அதிகம் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரித்து இருக்கிறது. 700க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் பல கட்டிடங்களும் அதிகமான வீடுகளும் இடிந்து விழுந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டிருப்பதால் பல குடியிருப்புகள் இருளில் மூழ்கியுள்ளது.

Categories

Tech |