இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கில் கரையொதுங்கிய பைலட் திமிங்கலங்களில் 46 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள மதுரா என்ற தீவில் திடீரென நூற்றுக்கணக்கில் பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அவற்றை மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்ட திமிங்கலங்களில் பல திமிங்கலங்கள் தங்களது தாயை தேடி கொண்டு மீண்டும் கரைக்கே திரும்பியுள்ளது.
மதுரா தீவில் வசிக்கும் பொதுமக்களும்,தன்னார்வலர்களும் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் மீது தண்ணீரை அள்ளி ஊற்றி அவற்றை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்காமல் 46 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தது . உயிரிழந்த திமிங்கலங்களை புதைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் தானாகவே கரை ஒதுங்கியது ஏன் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் திமிங்கலங்கள் தங்களுக்கென்று இருக்கும் தலைவனை பின்தொடரும் பழக்கத்தை கொண்டவை. மேலும் ஏதாவது ஒரு திமிங்கலம் காயமடைந்தலோ அல்லது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட்டாலோ அதனை சுற்றி ஒன்றுகூடும் இயல்பான உணர்ச்சி திமிங்கலத்திடம் உண்டு என்றும் கூறப்படுகிறது.