பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் தினமும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோட்டார் பகுதியில் இருக்கும் கடைகளில் நெகிழி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி மாநகராட்சி அதிகாரி விஜயச்சந்திரன் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் ஒரு குடோனில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 460 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். அதன்பிறகு உரிமையாளருக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்தனர்.