வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இன்று காலை உத்திரபிரதேசம், மதுரா டெல்லியில் கனத்த மழை பெய்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கிஷங்கஞ் என்ற பகுதியில் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Categories