தமிழகத்திலிருந்து 47 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விமானம் மூலம் தெலுங்கானா விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தெலுங்கானாவில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழகத்தில் இருந்து 47 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜனை பெறுவதற்கு ஆக்சிஜன் தொட்டிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தெலுங்கானாவில் போர் விமானங்கள் மூலம் அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேந்தர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.