தமிழ் திரைப்பட உலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். இவர் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ற பட்டத்தையும் பெற்றார். இவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்ததால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் ராவணன் ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் ஃபேஷன் ஷோவில் 47 வயதான நடிகை ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த புகைப்படங்கள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.