பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு… அவருக்கு பிறந்ததில் பெருமை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன் பின்னர் கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வருகிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனது சமூக வலைதளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்து இருந்தார்.
76 years of independence 🇮🇳 saluting sacrifices,struggles n strength.. #proudindian🇮🇳
47 years of #rajinism .. sheer hard work grit n dedication !proud to born to him #prouddaughter❤️ pic.twitter.com/be5yZGDHwu— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) August 15, 2022
அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற பேனரை எளிமையான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்கும் புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திர தின கொண்டாடும், அதே வேளையில் அவருடைய தந்தையின் திரை வாழ்க்கை குறிக்கும் வகையில் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் சுதந்திரத்தின் 76 ஆவது ஆண்டு தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும், வலிமைக்கும் வணக்கம். பெருமைமிக்க 47 வருட ரஜினிசம் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அவருக்கு பிறந்ததில் பெருமை…. அன்புக்குரிய மகள் என்று குறிப்பிட்டதோடு ரஜினிக்கு தேசிய கொடியை கட்டி விடும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.