Categories
உலக செய்திகள்

47 வினாடிகளில்…… “விரைவாக முடி வெட்டி உலக சாதனை”….. வைரல் வீடியோ…..!!!!

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமுடியை வைத்து அப்படி என்ன செய்து விட்டார் என்ற கேள்வி எழலாம். டிரிம்மர் உதவியுடன் விரைவாக முடி வெட்டி சாதனை படைத்துள்ளார். இதற்கு இவர் எடுத்து கொண்டது 47.17 வினாடிகள். இதனை செய்து முடித்ததும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நீதிபதிகள் வருகின்றனர்.

அவர்கள் முடி வெட்டி கொண்டவரின் தலைமுடியின் நீளம் பற்றி அளந்து கொண்டனர். பின்னர் முறையாக பணி முடிந்து இருக்கிறது என உறுதி செய்து கொண்டனர். இதையடுத்து, கான்ஸ்டன்டினோசின் பெயர் கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்து கொள்ளப்பட்டது.

Categories

Tech |