Categories
அரசியல் மாநில செய்திகள்

47 தொகுதி நின்னோம்… 6 மட்டும் தான் ஜெயிச்சி இருக்கோம்….தனி அறையில் ஆலோசிக்கும் ஸ்டாலின் …!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வரும் நிலையில் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே பலவீனமான பகுதியாக உள்ள இந்த மண்டலத்தில் முதல் முறையாக கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனை கூட்டம் இரண்டு கட்டமாக நடைபெற்றது. கொங்கு மண்டலத்தில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இரண்டு கட்டமாக ஆலோசிக்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர், நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், பேரூர் கழக செயலாளர் என 218 பேரிடம் கூட்டத்தில் கலந்துகொண்டு உள்ளார்கள்.

இந்த ஆலோசனையில் கழக முன்னோடிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். திமுக தலைவர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் 5பெரும் பங்கேற்று உள்ளார்கள். இந்த ஆலோசனை மேடையின் அருகே ரகசிய அரை திறக்கப்பட்டு கழக நிர்வாகிகளுடைய குறைகளை ஸ்டாலின் நேரடியாக கேட்டறிகின்றார். ஸ்டாலினிடம் நேரடியாக குறைகளை கேட்பதற்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய குறைகளை ஸ்டாலினிடம் சொல்கின்றனர். உள் கட்சி பிரச்சினை குறித்தும் இந்த கூட்டத்தில் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இதை தொடர்ந்து மாலையில் சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருக்கின்றார்.  கடந்த தேர்தலில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள் ? வாக்குறுதியில் என்ன நடைமுறைப்படுத்தவில்லை ? ஆளும் கட்சியை மக்கள் எந்த அளவு நம்பாமல் இருக்கின்றார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். வரக்கூடிய தேர்தல் பணியை மையப்படுத்தியே இந்த ஆலோசனைகளும்  நடந்துகொண்டிருக்கிறது.

Categories

Tech |