சென்னை அடையாறில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதல்வரை நிறுத்தி பொதுமக்கள் அவருடன் கலந்துரையாடினர். முதலில் வழிமறித்த பெண் ஒருவர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அங்கிருந்த பொதுமக்கள் சிலரும் முதல்வரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும், இப்படியே தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நீங்கள் இளமையாக தோன்ற காரணம் என்ன என கேட்டவருக்கு, தினசரி உடற்பயிற்சியை காரணம் என பதிலளித்தார்.
அதன் பின்னர் பொது மக்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனக்கு 68 வயது ஆகியும் தொடர்ந்து மிதிவண்டி பயிற்சி, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகிய பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன் என்றார் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் முதல்வரின் பேரன்பற்றி நலன் விசாரித்தனர். அதற்கு முதல்வர், வெளிநாடிற்கு கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக தனது பேரன் அண்மையில் சென்றுள்ளதாக கூறினார். பொதுமக்கள் இன்பநிதி நன்றாக விளையாட வேண்டும் என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முதல்வராக நீங்கள் தான் வரவேண்டும் நாங்கள் என்று பலமுறை விரும்பியதாக அவரிடம் தெரிவித்தனர்.