சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.1,597.59, கோடி மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்காக ரூ.699.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.