சுவிற்சர்லாந்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளனர்.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் இருக்கும் Meinisberg பகுதியில் மூன்று நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது, அவசர உதவி அதிகாரிகள் அந்த கும்பலை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை சுமார் 48 திருட்டு சம்பவங்களை செய்துள்ளனர்.
இதில் சுமார் 25 முறை பெர்ன் மண்டலத்தில் திருடியதாக கூறியுள்ளனர். மேலும் இதன்மூலம் சுமார் 1,40,000 பிராங்குகள் ஈட்டியிருக்கிறார்கள். அதன்பிறகு காவல்துறையினரிடம் மூவரும் மாட்டிக் கொண்ட நிலையில், அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மூவரும் விசாரணை கைதிகளாக இருக்கின்றனர்.