Categories
தேசிய செய்திகள்

48 சடலங்கள்… புனித ஆற்றில் மிதந்த கொடுமை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கங்கை நதியில் 48 சடலங்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் இருக்கும் சவுதா என்ற கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டி பல சடலங்கள் மிதந்தது. சுமார் 48 உடல்கள் மிதந்து வந்ததது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்து பார்த்த அதிகாரிகள் அது கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். மேலும் அந்த உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது.

இதன் காரணமாக அது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீரிலேயே இருந்திருக்கலாம் என்றும், வாரணாசி அல்லது அலகாபாத்தில் இருந்து உடல்களை கங்கையில் வீசி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மிதந்து வந்து கரை ஓரம் இருக்கும் உடல்களை அங்கு சுற்றித் திரியும் நாய்கள் கடித்து குதறி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்று அங்கு இருக்கும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |