பிரிட்டனில் சாலை ஒன்றில் கொடூர விபத்து நடந்ததை மொபைலில் வீடியோ எடுத்த ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் M6 என்ற மிக பெரிய சாலையில், கடந்த 8 ஆம் தேதி அன்று மூன்று லாரிகள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு நபர் உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் காரணமாக இச்சாலையின் தெற்கு பகுதி சுமார் 17 மணி நேரங்களுக்கு அடைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கொடூர விபத்தை, அந்த நேரத்தில் வாகனத்தில் சென்ற சுமார் 48 ஓட்டுநர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதற்காக தங்கள் வாகனத்தின் வேகத்தையும் குறைத்ததாக தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஓட்டுநர்களை கண்டுபிடித்த காவல்துறையினர், அவர்களை எச்சரித்தார்கள். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.