48 மணி நேரமாக புயல் ஒரே இடத்தில இருப்பது தனக்கு ஆச்சார்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து, புரெவி புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்னரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் 48 மணி நேரமும் ஒரே இடத்தில் காணப்படுவது என் வாழ்நாளிலேயே ஆச்சரியம் அளிக்கக் கூடியது விஷயம் என்றும், அதற்கான காரணம் என்ன? என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நிவர் புயலுக்கு பிறகு வங்க கடலில் உருவான புயல் இலங்கையின் திருகோணமலை-பருத்தித்துறை அருகே கரையை கடந்தது.
இந்நிலையில் பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்னரும் புரெவி, தொடர்ந்து 48 மணி நேரம் ஒரே இடத்தை விட்டு நகராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய வலைதல பக்கத்கில் கூறியுள்ளார். அதில், “இரு உயரழுத்த பகுதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட காற்றழுத்தம் தனது இரு பகுதிகளிலும் நகர்வதற்கு கிரிப் கிடைக்காததால் ஒரே இடத்தில் தங்கியுள்ளது. இனி கிழக்கு பகுதி காற்றால் நகர்த்தப்படும்.
ஆனால் பருவமழை காரணமாக 48 மணிநேரமாக ஒரு புயல் ஒரே இடத்தில் இருப்பதை என் அனுபவத்தில் நான் இப்போது தான் பார்க்கிறேன். பொதுவாக தென்மேற்கு பருவமழையின் போது குஜராத்தில் தான் இந்த நிலை ஏற்படும். ஆனால் வடகிழக்கு பருவமழையின் போது இது தான் முதல் முறை. மேலும் புரெவிக்கு இறுதி நிலையும் இதுதான். இது இன்று வலுவிழந்து அந்த இடத்தை விட்டு சென்று விடும். இதையடுத்து 10 நாட்கள் மழை இருக்காது. ஆனால் கிழக்கு காற்றால் டிசம்பர் 8ம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்கும். பின்னர் படிப்படியாக குறையும்” என்று தெரிவித்துள்ளார்