அதிமுகவின் 48_ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு MGR மற்றும் ஜெயலலிதா திருஉருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்.
48 ஆவது ஆண்டு விழா அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தம்பி துரை , அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேறனர்.நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் பல அமைச்சர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. மேலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிமுக அலுவலகத்திலும் பங்கேற்ற அதிமுகவினரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.