Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் இந்த தப்பு நடக்கவே கூடாது…. 48 பேரை கைது செய்த காவல்துறையினர்…. அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 48 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 31 காவல் நிலையங்களில் 48 பேர் மீது சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த 7,500 ரூபாய் பணம் 339 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |