தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, போன ஆண்டு 1௦-வது பரீட்சை முடிந்த பிறகு, தேர்வு பட்டியலில் பார்த்த அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம் காத்திருந்தது.. தமிழக வரலாற்றில் பத்தாவது வகுப்பிலே.. தமிழ் வகுப்பிலே 48 ஆயிரம் பேர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.
இதுவரைக்கும் தமிழக சரித்திரத்தில் எப்போதுமே கூட தமிழ் மொழியிலே பத்தாம் வகுப்பில் 48 ஆயிரம் பேர் தோல்வி அடைந்தது கிடையாது. இது எல்லாம் ஒரு உதாரணமாக சொல்லுகின்றோம். அதற்கு முன்பு தமிழகத்தில் கிட்டதட்ட 2 லட்சம் இன்ஜினியரிங் சீட் இருக்கு, பொறியியல் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 2 லட்சம் சீட். ஆனால் அதில் தமிழ் மொழியில் தான் அதை படிக்க வேண்டும்.
தமிழ் மொழியில் தான் முழுவதுமாக இந்த பொறியியல் கல்வியை படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய இடம் 1377 தான். அதாவது 2 லட்சம் சீட்டில், 1377 சீட்டு தமிழ் வழியில் நீங்கள் பொறியியல் கற்கலாம். ஆனால் போன வருடம்… கடைசி வருடம் டேட்டாவை பார்த்தீர்கள் என்றால்,
50 சீட் மட்டும் தான் நிரம்பி இருக்கிறது, 2 லட்சம் பொறியியல் மாணவர்கள் படிக்கக்கூடிய தமிழகத்தில்… வெறும் 50 மாணவர்கள் மட்டும்தான் தமிழ் மூலமாக முழு பொறியியல் படிக்க வேண்டும் என்று அங்கு இருக்கிறார்கள், காரணம் அரசு அவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஊக்கம். இதைப்போல் எந்த ஒரு துறையை எடுத்து பார்த்தாலும் கூட, தமிழ் என்பது மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது. என கணக்கு போட்டு ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பேசினார்.