Categories
உலக செய்திகள்

4,80,000மரணம்…! உலகிற்கு புது சிக்கல்… பகீர் கிளப்பும் புள்ளிவிவரம் ..!!

கடந்த 20 ஆண்டுகளில் தீவிர பருவநிலை மாற்றத்தால் இதுவரை 4,80,000 பேர் இறந்துள்ளனர்

கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். புயல்,வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற பருவ நிலை தொடர்பான பேரழிவுகளால் வளரும் நாடுகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுகளால் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 2.56 டிரில்லியன் டாலர் செலவாகியுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட 11,000 அதிகமான தீவிர வானிலை நிகழ்வுகளில் இதுவரை சுமார் 4,80,000 பேர் இறந்துள்ளனர். இதில் புவேர்ட்டோ ரிக்கோ, மியான்மார் மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஏழை நாடுகளின் வெப்பநிலை உயர்வை குறைக்க மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்வதற்கு பணக்கார நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் கீழ் முடிவு செய்திருந்தது.ஆனால் தற்போது வளரும் நாடுகளுக்கு பருவநிலை நடவடிக்கைகளுக்காக கிடைக்கும் உண்மையான நிதி மிகவும் குறைவாக உள்ளது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

 

Categories

Tech |