Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூ 48,000,00,00,000……”பரிவர்த்தனை பாதிப்பு” 2_நாள்….4,00,000 ஊழியர்கள்…. வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை…!!

வருகின்ற 26,27_ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,நாடு முழுவதும் 4 லட்சம் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வங்கி அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26 , 27ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.  இதில் இந்தியளவில் 4 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள் , தமிழகத்தில் 40 ஆயிரம் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் எனவே இந்த போராட்டம் 100% வெற்றி பெறும். இதனால் ஒரு நாளைக்கு 48 ஆயிரம் கோடி அளவில் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

மத்திய அரசு சாதாரண மக்களுக்கு எதிரான வங்கி இணைப்பை கைவிட வேண்டும்.இதனால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். வங்கிகள் இணைப்பால் பெரிய வங்கிகள் உருவாகும் , பெரிய வங்கிகள் பெரிய நிறுவனங்களுக்கான வங்கிகளாக மாறும் அபாயம் ஏற்படும். இது பெரிய நிறுவனங்களுக்கு பெருமளவு கடன்களை தள்ளுபடி செய்ய வழிவகை செய்யும். மேலும் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை இணக்கும் அதேநேரத்தில் தனியார் வங்கிகளுக்கான  உரிமைகளை வாரி வழங்குகிறது.

அரசின் இதன் நோக்கம் சாதாரண மக்களை தனியார் வங்கிகளை நோக்கி தள்ளப்படுவதற்கான  நோக்கமாகும். எனவே அரசின் இந்த முடிவை கைவிட்ட வேண்டும். ஊழியர்களுக்கு கடந்த 29 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் , வங்கி கிளைகளில் போதுமான அளவு ஊழியர் மற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று 26 மற்றும் 27_ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் , அதோடு நவம்பர் மாதம் 2_ஆவது வாரத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.

Categories

Tech |