தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை 48,154 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது. எனினும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் முதலமைச்சர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
எனவே, கொரோனா குறித்து கவலைப்படத் தேவையில்லை. பேருந்தில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதனை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஊதிய பற்றாக்குறையால், போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் போக்குவரத்து துறைக்கு, 48, 154 லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலான சூழலில் தொழிற்சங்க கூட்டங்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன் நடக்க வேண்டியது. ஆனால், தற்போது தான் நடந்திருக்கிறது. இது தொழிலாளர்களுக்கான அரசாங்கம். அனைத்து நபர்களிடமும் கோரிக்கைகள் கேட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் முதல்வருடன் ஆலோசனை செய்து சுமுக தீர்வு கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறார்.