Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தகுதி தேர்வு” 1,62,323 பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி நடைபெற்றது. 1,62,323 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் அதிக பட்சமாக ஒருவர் மட்டுமே 99 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

Image result for ஆசிரியர் தகுதி தேர்வு

தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடைபெறும் என்றும், எந்த மாவட்டத்தில் காலி பணியிடங்கள் உள்ளதோ அம்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன்நடந்து கொள்ளும் என்றும்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியாபிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |