தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் புதிதாக மேலும் 74 பேருக்குகொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.
அனைவரும் சமூக விலகலை கண்டுபிடிக்க வேண்டும். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 407 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 90541 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 5315 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. கொரோனா பாதித்த 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.