Categories
உலக செய்திகள்

48,500 ஆண்டுகள் பழைய வைரஸ்…. பனிக்கட்டிகள் உருகினால் கொடிய ஆபத்து…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம்,இந்த சூழலில் திடீரென வைரஸ் தொற்று பரவினால் ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் சைபிரியாவில் ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கு அடியில் இருந்த 24 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதிதாக 13 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சோம்பி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவை 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் பல ஆண்டுகளாக பனிக்கட்டிக்கு அடியில் வைரஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் சிலவற்றை விஞ்ஞானிகள் வெளியே எடுத்து உயிர்ப்பித்து ஆராய்ச்சித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால் ஆபத்து அதிகம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பனிக்கட்டிகள் உருகும் பட்சத்தில் வைரஸ்கள் வளிமண்டலத்துடன் கலந்து கொடிய ஆபத்தை உருவாக்கவும் வல்லது.

Categories

Tech |