Categories
கிரிக்கெட் விளையாட்டு

’49 பந்தில் 100 ரன்கள்’…. சீறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்…. மண்ணை கவ்விய லாகூர் அணி….!!!!

தற்போது பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 15-ஆவது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் குவெட்டா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய லாகூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 204/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து குவெட்டா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதில் ஓபனர் ஹசன் அலி 7 ( 8 ) ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினார்.

அதனை தொடர்ந்து வந்த இங்கிலாந்து வீரர்களான ஜேம்ஸ் வின்ஸ், ஜேசன் ராய் உள்ளிட்டோர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடத் தொடங்கினர். அதில் காட்டடி அடித்து பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விட்ட ஜேசன் ராய் 49 பந்துகளில் 100 ரன்களை கடந்த நிலையில் 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரி உட்பட 57 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 19.3 ஓவர்கள் முடிவில் 207/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |