Categories
உலக செய்திகள்

18 வயது இளம்பெண்ணுடன் 3-ஆவது திருமணம்…. 49 வயதுடைய பிரபலம் வெளியிட்ட தகவல்…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலம் தன்னைவிட 31 வயது குறைந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தானில் பிரபல கட்சியினுடைய தலைவர் ஆமீர் லியாகத் தன் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், தன் இரண்டாம் மனைவியையும் பிரிவதாக கடந்த புதன் கிழமை அறிவித்துவிட்டு, 18 வயதுடைய சியாடா டேனியா ஷா என்ற இளம்பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார்.

இதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார். அனைவரும் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள். இருளான சுரங்க பாதையை கடந்து வந்திருக்கிறேன். அது தவறான திருப்பம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் அந்தப் பெண் தெரிவித்ததாவது, நான்  சிறு வயதாக இருந்த போதே எப்போதெல்லாம் அழுகிறேனோ அப்போது, என் பெற்றோர் தொலைக்காட்சியில் அவரின் படத்தை தான் காட்டுவார்கள். அவரை எனக்கு அப்போதிருந்து மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |