சென்னையில் தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தற்பொழுது தங்களது பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகவே 3 பேர் கொண்ட குழுவினை அமைத்து செவிலியர்களுடன் 15 நாட்களில் கலந்து பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர உள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செவிலியர்கள் இந்த போராட்டம் நடத்தியதற்காக வருத்தம் தெரிவிக்கின்றார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 4 ஆயிரத்து 900 செவிலியர்களை புதியதாக நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆகவே தற்கால பணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்” என்று பேசினார்.