Categories
உலக செய்திகள்

 ஆத்தாடி ஒரு பீர் ”ரூ 49,01,567” அரண்டு போய் பில் கட்டிய எழுத்தாளர்….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர்  பீர் குடித்ததற்கு 1 லட்சம் டாலர் செலுத்தியது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக பெரிய பெரிய ஆளுமைகள் மது அருந்துவதற்காக பெரிய பெரிய நட்சத்திர விடுதியை நாடுவது உண்டு. அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள விடுதிக்கு சென்ற  ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் பீர் ஆர்டர் செய்து அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு லட்சக்கணக்கில் பில் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீட்டர் லாலா என்பவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டு இருக்கும் ஆஷஸ் தொடரில் இருந்து வருகின்றார்.

Image result for peter lala Cricket writer and beer editor of The Australian

இவர் நேற்று  மான்செஸ்டரில் உள்ள மால்மைசன் ஹோட்டலுக்கு சென்று பீர் குடித்ததற்காக  99,983 ஆஸ்திரேலியன் டாலர் பில் செலுத்தியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த இவர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் “வரலாற்றிலேயே அதிக விலைகொண்ட பீர்” என்று பதிவிட்டார்.இந்த பீரை பாருங்கள்? வரலாற்றில் அதிக விலை கொண்ட பீர் இது தான் . இதை தற்போது அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். அவர் செலுத்திய  99,983 ஆஸ்திரேலியன் டாலரின் இந்திய மதிப்பு ரூ 49,01,567  ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |