தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வில் பொது மக்கள் எங்கெல்லாம் செல்லக்கூடாது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் ஒரு சில விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை தொடரும், மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் என்பது உள்ளிட்ட பிற கூட்டங்களுக்கும் தடை நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.