Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்…. 4-வது டோஸ் தேவைப்படும்… நிபுணர்கள் தகவல்…!!!

அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோணி வுசி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். எனவே, கொரோனாவை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் அந்தோணி வுசி தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் தொற்றை தடுப்பதற்கு அமெரிக்காவில் 4-ஆம் டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம். இந்த தடுப்பூசி வயது மற்றும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |