பிரான்ஸ் நாட்டில் நான்காம் தவணை கொரோனா தடுப்பூசி இன்றிலிருந்து செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் அதிகமான நாடுகளில் கொரோனா தொற்றிற்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் பல நாடுகளில் பூஸ்டர் தவணை செலுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில நாடுகள், இரண்டாவது பூஸ்டர், அதாவது நான்காம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், இஸ்ரேல் நாட்டில் நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் பிரான்சில் இன்றிலிருந்து நான்காம் தவணை தடுப்பூசி அளிக்கப்படும் என்று அதிபர் மேக்ரோன் தெரிவித்திருக்கிறார். பூஸ்டர் தவணை எடுத்துக்கொண்ட 80 வயதுக்கு அதிகமானோருக்கு நான்காம் தவணை தடுப்பூசி அளிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.