உக்ரைனில் போர் நடக்கும் நிலையில் உக்ரைன்-ரஷ்ய தரப்பில் உள்நாட்டு பிரதிநிதிகளிடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகள் உக்ரைன் நாட்டில் எப்போது போர் முடிவடையும்? என்று வருத்தத்துடன் இருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் அனைத்து நகர்களிலும் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் காணொலிக் காட்சி மூலமாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. சுமார் 2 வாரங்களுக்கும் அதிகமாக உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளிடையே நடந்த தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதற்காக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக்கிடையே நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.