சீன நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில் இருக்கும் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
சீன நாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜிலின் என்ற வட கிழக்கு மாகாணத்திலும் புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, ஷாங்காய் நகரில் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அங்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் என வெளி நபர்களுடன் தொடர்பில் இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அலுவலகங்களும், அத்தியாவசியமற்ற வணிகங்கள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அத்துடன் பொது போக்குவரத்து செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் 87% மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். எனினும், 60 வயதுக்கு அதிகமான நபர்களில் 5.2 கோடி மக்களுக்கு தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்படவில்லை.