புதுச்சேரியில் சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடியை கொலை செய்ய ஐந்து கோடி ரூபாய் கேட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2ஆம் தேதி வாட்ஸப் மற்றும் சத்திய என்ற பெயரில் உள்ள பேஸ்புக் மூலம் புதுச்சேரியில் உள்ள சில ஜாதி தலைவர்களை கொல்ல வேண்டுமென பதிவிட பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு 5 கோடி ரூபாய் தரவேண்டும் என்று பதிவிட்டிருந்தது. இது தொடர்பாக அரியாங்குப்பத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான தங்கதுறை அரியாங்குப்பம் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பிரதமர் மோடியையும் ஜாதி தலைவர்களின் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தது ஐய்யங்குப்பம் மனவெளியை வழியைச் சேர்ந்த சதானந்தம் என்பது தெரியவந்தது அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.