Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“5ஜி சிம் கார்டு மாற்று தருகிறோம்” நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பல்…. போலீசார் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த 1-ஆம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை முதற்கட்டமாக டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 4ஜி சிம் கார்டுகளை 5ஜி சிம் கார்டுகளாக மாற்றுத் தருவதாக கூறி மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, பணத்தை மோசடி செய்யும் மர்ம கும்பல் 4ஜி சிம் கார்டை 5ஜி  சிம் கார்டுகளாக மாற்றி தருகிறோம். உங்களது செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை கூறுங்கள் என தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் ஓடிபி எண்ணை கூறியவுடன் அவர்களது வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் பணத்தை மோசடி செய்கின்றனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |