திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ரகுமத் நகரில் இன்ஜினியரான செந்தில்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்திடம் இணையதள இணைப்பு பெற்றுள்ளார். அந்த நிறுவனத்தினர் அமேசான் ப்ரைம் மற்றும் ஓடிடி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இலவசமாக வழங்கப்படாததால் செந்தில்குமரன் நிறுவனத்தினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் பணியாளர் ஆய்வு செய்து இணையதளத்தில் 4ஜி இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
5g இணைப்பு கொடுத்தால் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் வசதிகள் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து 3 மாதமாகியும் அந்த நிறுவனத்தினர் செந்தில்குமரனுக்கு 5g சேவை வழங்காததால் செந்தில்குமரன் நெல்லை நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் சம்பந்தப்பட்ட நிறுவனம் செந்தில்குமரனுக்கு 10000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு 2000 ரூபாய் பணம், 3 மாதமாக செலுத்திய கட்டண தொகை 3536 ரூபாய் ஆகியவற்றை வழங்குமாறு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.