Categories
தேசிய செய்திகள்

5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட அச்சம்…. மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்கிய ஏர் இந்தியா…. விளக்கமளித்த அதிகாரிகள் ….!!!!

அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தை செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது தொழில்நுட்பங்களால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் 5ஜி அலைக்கற்றையின் ஊடுருவல் விமானத்தின் அல்டிமீட்டர் போன்ற கருவிகளை பாதிப்படைய செய்வதால், அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானம் பறக்கும் உயரத்தை கண்டுபிடிக்க முடியாமல் விமானிகள் கஷ்டப் படுவார்கள் என்றும், ஓடுபாதை அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது விமானம் புறப்படுவதிலும், இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 5ஜி தொழில்நுட்பத்தால் முக்கிய கருவிகள் செயலிழந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை நேற்று முதல் ரத்து செய்துள்ளன. மேலும் ஏர் இந்தியா அமெரிக்கா செல்ல இருந்த 5 விமானங்களையும் ரத்து செய்துள்ளது. எந்த முன்னறிவிப்புமின்றி விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அரசு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றையின் விளக்கத்தைத் தொடர்ந்து மறுபடியும் அமெரிக்காவுக்கு விமான போக்குவரத்தை ஏர் இந்தியா இன்று தொடங்கியது.

Categories

Tech |