Categories
பல்சுவை

5ஜி தொழில்நுட்பம்: சாதகங்கள், பாதகங்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

5-ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு சமீபத்தில் நடத்தியது. அவற்றில் , அலைக்கற்றையானது ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடபோன்-ஐடியா, அதானி போன்ற நிறுவனங்களுக்கு ரூபாய்.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. தொழில் அதிபா் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூபாய்.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5-ஜி அலைக்கற்றையை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டமாக அவை முக்கியமான நகரங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பிறகு படிப் படியாக கிராமங்களைச் சென்றடையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. வருகிற தீபாவளி முதல் சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் 5-ஜி சேவையை வழங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

என்னென்ன சாதகங்கள்?..

# கைப் பேசி உள்ளிட்டவையின் செயல் திறனானது 4ஜியை விட 5-ஜி தொழில் நுட்பத்தில் வேகமாக இருக்குமாம்.

# படங்கள், காணொலிகள், இசைத்தொகுப்புகள் ஆகியவற்றை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்துவிட முடியும்.

# இணைய சேவை வேகமாகக் கிடைக்கும் என்பதால் தானியங்கி இயந்திரங்கள், ரோபோக்கள் போன்றவற்றின் செயல்பாடும் மேம்படும்.

# செயற்கை நுண்ணறிவு, மெய்நிகா் தொழில்நுட்பம் உள்ளிட்டவை 4-ஜியை காட்டிலும் 5ஜி-யில் மிகச் சிறப்பாகச் செயல்படும்.

# பின் இணையத்தளத்தில் தரவுகளைத் தேடுவதும் மிக சுலபமாகும். அவற்றில் எவ்வித தாமதமும் ஏற்படாது.

# 5ஜி தொழில் நுட்பத்தின் வாயிலாக தரவுகளை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு மிக வேகமாகப் பகிர முடியும்.

# 5ஜி அலைக்கற்றையின் அலை வரிசை (பேண்ட்விட்த்) அதிகமாக உள்ளதால் அதிகப்படியான தரவுகளைக் குறைந்த நேரத்தில் பகிரமுடியும். இதனால் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும்.

பாதகங்கள் என்ன?

# 4-ஜி அலைக்கற்றையுடன் ஒப்பிடுகைம்போது 5ஜி அலைக்கற்றை குறைந்த தொலைவுக்கே பயணிக்கும்.

# கட்டிடங்கள், மரங்கள், மழை ஆகியவை 5-ஜி அலைக்கற்றையின் வேகத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் 5-ஜி அலைக் கற்றையை வழங்கும் கருவிகளை அதிகமான இடங்களில் பொருத்தவேண்டிய சூழல் நிலவும்.

# 5ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தி பல தரவுகளைக் குறைந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்துவிட முடியும் என்றாலும்கூட, தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகும்.

# விநாடிக்கு 100 மெகாபைட் (எம்.பி.) என்ற அளவிலேயே பதிவேற்ற வேகம் இருக்கும்.

# 5ஜி அலைக்கற்றையின் அலை வரிசை அதிகமாக இருப்பதால், அதிலிருந்து தரவுகளை எளிதில் திருடமுடியும். இதனால் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

# 5ஜி அலைக்கற்றையின் மூலம் ஒரே நேரத்தில் பல கருவிகளைத் தொடா்புகொள்ள முடியும் என்பதால், அவற்றிலிருந்து தரவுகளைத் திருடுவதும் எளிதாகும் என நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

Categories

Tech |