Categories
உலக செய்திகள்

5நாட்களுக்கு…. ரூ.75,25,75,00,000 கொடுங்க…! திடீர் பில்லை போட்ட எகிப்து….!!

இழப்பீடு வழங்கும் வரை எவர் கிரீன் சரக்கு கப்பலை விடுவிக்க முடியாது என்று எகிப்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாய் எவர் கிரீன் என்ற சரக்கு கப்பல் அண்மையில் தரைதட்டி நின்றது. இதனால் சுயஸ் கால்வாயில்  5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தொடர் முயற்சியால் கப்பல் மீட்கப்பட்டு கப்பல்  போக்குவரத்து தொடங்கியது. கப்பலை மிதக்கும் பணியில்  ஈடுபட்டதற்கான செலவு வணிக ரீதியிலான நஷ்டம் என ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என எகிப்த் கேட்டுள்ளது.

இதனை சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஒசாமாராபி உறுதி செய்துள்ளார். கப்பல் தரை தட்டியது தொடர்பான விசாரணை முடியும் வரையிலும், தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரையிலும் கப்பலை விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்கா டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 75,25,75,00,000ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |