மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எபோலா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை விடவும் வேறு பல கொடிய நோய்கள் மக்களை பாதித்து வருகின்றன. அந்த வகையில் கொங்கோ நாட்டில் கடந்த 5 மாதங்களாக எபோலா தொற்று நோய் பரவி மக்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 மாதங்களுக்கு மேலான காலகட்டத்தில் 55 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து கெங்கோ அரசு எபோலா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலில் ஜூன் மாதத்தில் இந்நோய் தொற்று பரவியதில் 119 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 பேருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்ட 119 பேரில் 55 பேர் பலியாகியுள்ளனர் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த எபோலாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டதால் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருடமான 2018 ஆகஸ்ட் மாதம் கெங்கோவில் முதன்முதலில் எபோலா நோய்த்தொற்று பரவியுள்ளது. இதுவரை 2277 பேர் எபோலாவினால் பலியாகியுள்ளனர்.