2022 ஆம் வருடம் திரை உலகிற்கு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம் ஏனெனில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்து வசூலை குவித்துள்ளன. இந்நிலையில் 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்தியா சினிமாவின் டாப் -10 பட்டியல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி யாஷ் நடிப்பில் கன்னட படமான KGF-2 முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து RRR, காந்தாரா, புஷ்பா, கமல் நடித்த விக்ரம் படம் ஐந்தாவது இடத்திலும்,, லைகர், கார்த்திகேயா-2, ராதே ஷியாம். சீதா ராமம், பொன்னியின் செல்வன்-1 ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.
Categories