தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் இருக்கும் வீட்டில் பழமையான உலோக சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சரவணன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 1 1/2 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய சிவகாமி அம்மன் உலோக சிலையை கைப்பற்றினர். இந்நிலையில் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த சிலை தொன்மையான தோற்றத்துடன் இருப்பதால் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசார் சரவணனிடம் உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு சரவணன் தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைத்தனர். அந்த சுய தற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Categories