விவசாயி வீட்டு தோட்டத்தில் புகுந்த 5 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் பகுதியில் வசித்து வரும் விவசாயியான நாட்டாமை சந்திரன்(46) தனது தோட்டத்தில் கற்கள் குவிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை சந்திரன் மற்றும் தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கற்களின் நடுவே சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சென்ற வனசரகர் பெருமாள், வன காப்பாளர் சரவணப்பெருமாள் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பாக மலைப்பாம்பை பிடித்து அதனை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.