பிரிட்டனில் உள்ளூர் அதிகாரிகளான 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதார செயலாளர் மேட் ஹான்காக் கூறியுள்ளார் .
கொரோனா தொற்று இங்கிலாந்தில் அதிகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதார துறை எச்சரித்துள்ளது.முந்தைய ஏழு நாட்களை விட இங்கிலாந்தின் 315 உள்ளாட்சி அதிகார பகுதிகளில் 69 இடங்களில் கொரனோ அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானது. இங்கிலாந்தின் துணைத்தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வேன் -டாம் பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் இது ஒரு நல்ல அறிகுறி இல்லை. இந்த நேரத்தில் நாம் நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ள வேண்டும் .
பொதுமக்கள் விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். மக்கள் கூட்டமாக செல்வதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் . வீட்டில் அதிகமானோர் ஒன்று சேர்வதை தவிர்த்து கொள்ளுங்கள் .கொரோனாவிற்கு பயந்து தங்களைப் பாதுகாத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் .இங்கிலாந்தில் 145 பேரில் ஒருவராக கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்க்காக் கூறியுள்ளார் .ஆனால் இறப்பு விகிதம் மற்றும் மருத்துவமனையில் சேர்த்தது அதிகமாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளனர் .மேலும் இரண்டு மோசமான கொரோனா ஹாட்ஸ்பாட்ஸ் என்னவென்றால் Northamptonshire உள்ள Corby மற்றும் Cambridgeshire உள்ள Peterborough என்று குறிப்பிட்டுள்ளார் .