Categories
உலக செய்திகள்

 5 அம்ச உடன்பாடு… இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை… மோதல் முடிவுக்கு வருமா?…!!!

மாஸ்கோவில் ஏற்பட்ட உடன்பாட்டை அமல்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தை காணொலிக் காட்சி மூலமாக நடந்து முடிந்தது.

இந்தியா மற்றும் சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மோதலால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி ரஸ்ய தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா மற்றும் சீனா வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.அந்தப் பேச்சுவார்த்தையில் 5 அம்ச உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டன. அவை படைகளை விரைவாக விலக்கிக் கொள்வது, பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்ப்பது, எல்லைப் பிரச்சனை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கடைபிடிப்பது, எல்லைக்கோடு பகுதியில் அமைதியை பராமரிப்பது உள்ளிட்டவை ஆகும்.

இந்த ஐந்து அம்ச உடன்பாட்டை எவ்வாறு அமல்படுத்துவது என்பது பற்றிய பேச்சுவார்த்தை நேற்று காணொலிக் காட்சி மூலமாக இந்தியா மற்றும் சீனா இடையே நடைபெற்றது. இது எல்லை பிரச்சனை தொடர்பான 19வது கூட்டம் என்றும், ஐந்து அம்ச உடன்பாட்டை அமல்படுத்துவது தான் அதன் முக்கிய நோக்கம் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.

Categories

Tech |