முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்களிடம் கட்டாயமாக வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். எங்கள் பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதன்பிறகு வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் பொருளாளர் சீனு, மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.