Categories
மாவட்ட செய்திகள்

5 அரசு விரைவு பேருந்து…. கட்டணம் செலுத்தவில்லை…. கயத்தாறில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரில் உள்ள சுங்கசாவடியை கடந்து செல்லும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுங்கவாடியில் கட்டணம் செலுத்துவதில் காலதாமதத்தை தவிர்க்க கூடிய வகையில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்ட மின்னணு அட்டை மூலம் சுங்கசாவடியை கடந்து செல்லும் வாகனம் தானாகவே இணையம் வழியாக கட்டணம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்தபோது பேருந்துக்கான கட்டணம் சுங்கவாடியில் செலுத்தப்படவில்லை. இதனால் அந்தப் பேருந்தை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். அதனைப் போலவே சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த மேலும் 4 அரசு பேருந்துகள் சுங்கவரி கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் அந்த பேருந்துகளை அனுமதிக்கப்படாமல் சிறை பிடித்தனர்.

இதையடுத்து நீண்ட நேரமாக பேருந்துகளில் காத்திருந்த பயணிகள் மாற்று பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு அந்த 5 அரசு பேருந்துகளுக்கும் சுங்கவாடியில் இணையம் வழியாக கட்டணத்தை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செலுத்தினர். அதன்பிறகு அந்த பேருந்துகளையும் கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |